உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஒளியை பரப்புவோம் புகையை அல்ல:கெஜ்ரிவால் Delhi govt ban| on crackers| ahead diwali |

ஒளியை பரப்புவோம் புகையை அல்ல:கெஜ்ரிவால் Delhi govt ban| on crackers| ahead diwali |

டில்லியில் காற்று மாசு மிக மோசமான நிலையில் உள்ளது. மேலும் மோசம் ஆவதை தடுக்க ஜனவரி 1வரை டெல்லியில் பட்டாசுகள் வெடிக்க அரசு தடை விதித்து உள்ளது. டெல்லியில் பட்டாசு கடை இல்லாதால் ஹரியானா, உத்தரபிரதேசம் போன்ற வெளி மாநிலங்களில் இருந்து பலர் பட்டாசு வாங்கி வருகின்றனர். வியாபாரிகள் சிலர் கடைகளில் மறைத்து வைத்தும் பட்டாசு விற்கின்றனர். இவற்றை கண்காணித்து தடுக்க டெல்லி போலீசார் 300 குழுக்களையும், வருவாய்த்துறை 77 குழுக்களையும் அமைத்துள்ளனர். இக்குழுக்கள் நடத்திய சோதனையில், 19 ஆயிரம் கிலோ பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. டெல்லியில் பட்டாசு வெடிக்காமல் அரசின் கட்டுப்பாடுக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும் என முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்தார்.

அக் 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி