உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டில்லியை புரட்டிப்போட்ட கனமழை: சாலைகளில் வெள்ளம் | Delhi Heavy Rain | Roads Flooded | Red alert |

டில்லியை புரட்டிப்போட்ட கனமழை: சாலைகளில் வெள்ளம் | Delhi Heavy Rain | Roads Flooded | Red alert |

6 மணி நேரம் நின்று அடித்தது டில்லியை புரட்டிப்போட்ட கனமழை இன்று ரெட் அலர்ட் மக்களுக்கு வார்னிங் வழக்கமாக ஜூன் 1ம்தேதிவாக்கில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். இந்த ஆண்டு 8 நாட்களுக்கு முன்பே பருவமழை பெய்யத் தொடங்கி விட்டது. கடந்த 16 ஆண்டுகளில், முன் கூட்டியே, தென்மேற்கு பருவமழை தொடங்குவது இதுவே முதல் முறை. கோவா, மஹாராஷ்ட்ரா, கர்நாடகாவில் இன்று மிக அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தேசிய வானிலைஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், டில்லியில் நேற்று இரவு திடீரென பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. 80 கிலோ மீட்டர் வேகத்துக்கு சூறைக்காற்றும் வீசியது. விடிய விடிய மழை கொட்டியது. இரவு 11.30 மணி முதல் அதிகாலை 5.30 மணி வரை மழை வெளுத்து வாங்கியதால் டில்லியில் பல சாலைகள் வெள்ளக்காடானது. இதனால் சில இடங்களில் பஸ், கார் போன்ற வாகனங்கள் மூழ்கின. 80 கிலோ மீட்டர் வேகத்துக்கு சூறைக் காற்று வீசியதால் சில இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. மின்கம்பங்கள் சாலையில் விழுந்தன. கனமழை காரணமாக மின்டோ சாலை, ஹுமாயூன் சாலை மற்றும் சாஸ்திரி பவன் உள்ளிட்ட பல பகுதிகள் நீரில் மூழ்கின. ஆறே மணி நேரத்தில் 8 சென்டி மீட்டர் மழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் கூறியது.

மே 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி