அரசு கேபிளில் புளூ பிலிம்: வந்தது எப்படி? மக்கள் கேள்வி dharmapuri district pornographic film relay
கடந்த அ.தி.மு.க ஆட்சியில், மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் கேபிள் இணைப்பு வழங்கும் வகையில் அரசு கேபிள் டிவி நிறுவனம் துவங்கப்பட்டது. அதன்மூலம், டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் தனியார் கேபிள் டிவி நிறுவனங்களை விட, அரசு கேபிள் டிவியில் குறைந்த கட்டணத்தில் அதிகப்படியான சேனல்களை மக்கள் பார்த்தனர். தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு அரசு கேபிள் டிவியின் தரம் குறைக்கப்பட்டு, முடக்கப்படும் சூழல் உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி போல பல இடங்களில் தனியார் நிறுவனங்களும் செட்டாப் பாக்ஸ் மூலம் கேபிள் டிவி சேவையை வழங்கி வருகின்றன. அரசு கேபிள் டிவி மூலம் நேற்று டிவி நிகழ்ச்சிகளை ரசித்து பார்த்துக் கொண்டிருந்த தர்மபுரி மக்களுக்கு திடீரென ஒரு பயங்கர அதிர்ச்சி வந்தது. ஒரு உள்ளூர் சேனலில் ஆபாச படம் ஓட ஆரம்பித்தது. சில நிமிடங்கள் ஓடிய படம் நின்றதும், அடுத்ததாக இன்னொரு ஆபாச படம் இன்னும் சில நிமிடங்களுக்கு ஓடியது.