/ தினமலர் டிவி
/ பொது
/ ₹20 கோடி வைரம் கொள்ளை - மீட்பில் நடந்தது என்ன? | ₹20 Crore diamonds | Seized | Stolen | Merchant c
₹20 கோடி வைரம் கொள்ளை - மீட்பில் நடந்தது என்ன? | ₹20 Crore diamonds | Seized | Stolen | Merchant c
சென்னை அண்ணா நகர் டவர் வியூ காலனியை சேர்ந்தவர் சந்திரசேகர். வைர வியாபாரி. கடந்த 4ம் தேதி, தன்னிடம் இருந்த 20 கோடி ரூபாய் மதிப்பிலான 4 வைர கற்களை விற்பதற்காக, வடபழனி - ஆற்காடு சாலையில் உள்ள ஸ்டார் ஹோட்டலுக்கு சென்றார். அங்கு வைர கற்களை வாங்க போவதாக சொல்லி வர சொன்னவர்கள், அவரை கட்டிப் போட்டு வைர கற்களை பறித்துக் கொண்டு தப்பினர். ஓட்டல் ஊழியர்கள் உதவியால் அங்கிருந்து வெளியே வந்த சந்திரசேகர், வடபழனி போலீசில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து தமிழகம் முழுதும் கொள்ளை கும்பலை வலைவீசி தேடினர்.
மே 17, 2025