காதலிக்க மறுத்த பள்ளி மாணவி: கழுத்தை அறுத்த இளைஞனுக்கு தர்மஅடி | dindigul police crime | Dinamalar
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்த ஆத்துமேடு பகுதியை சேர்ந்தவர் பேட்ரிக் சிலுவைமுத்து (19). இவனது தந்தை திண்டுக்கல்லில் உள்ள டீக்கடையில் 2 ஆண்டுக்கு முன் வேலை பார்த்தார். படிப்பை பாதியில் நிறுத்திய பேட்ரிக், அப்பா அம்மாவுடன் திண்டுக்கல்லில் வசித்தான். கூலி வேலைக்கு சென்று வந்தான். ஒருமுறை ஒரு வீட்டில் பிளம்பிங் வேலைக்காக சென்றபோது, பக்கத்து வீட்டில் வசித்த 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் காதலிக்க ஆரம்பித்தனர். சிறுமி 11ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக இருவரும் காதலித்து வந்தனர். திண்டுக்கல்லில் உள்ள பெரியம்மா வீட்டுக்கு மாணவி வந்து விடுவார். அங்கு பேட்ரிக் சென்று விடுவார். அங்கு இருவரும் காதலிப்பது வழக்கம். ஒரு கட்டத்தில் இவர்களது காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வந்தது.