உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / யூடியூபர் திவ்யாவை குண்டாசில் தூக்கிய போலீஸ் | Divya kallachi | makkal parvai chithra | Divya kallac

யூடியூபர் திவ்யாவை குண்டாசில் தூக்கிய போலீஸ் | Divya kallachi | makkal parvai chithra | Divya kallac

கடலூரை சேர்ந்த 54 வயதான சித்ரா என்ற பெண், மக்கள் பார்வை என்னும் யூடியூப் சேனலை நடத்தி வந்தார். இவர் சென்னை டிஜிபி ஆபீசில் பரபரப்பான புகார் ஒன்றை கொடுத்தார். திவ்யா கள்ளச்சி என்ற யூடியூப் சேனலை நடத்தி வந்த தஞ்சாவூர் திவ்யா வயது 30, அவரது நண்பனான கீழக்கரை கார்த்திக் என்ற யூடியூப் சேனலை நடத்தி வந்த கார்த்திக் வயது 30 ஆகியோர் ஆபாச வீடியோ எடுக்கின்றனர். குறிப்பாக, ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறுவர்களை வைத்து ஆபாச ரீல்ஸ் எடுத்து வைத்திருக்கின்றனர் என்று டிஜிபி ஆபீசில் சித்ரா புகார் செய்தார். அதோடு தனது வங்கி கணக்கை ஹேக் செய்து 2.5 லட்சம் ரூபாயை திவ்யா திருடியதாகவும் அவர் சொல்லி இருந்தார். இது பற்றி முதலில் விருதுநகர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் மீனாட்சி விசாரணை நடத்தினார். யூடியூபர்கள் திவ்யா, கார்த்திக் சேர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறுவர்களை பயன்படுத்தி ஆபாச ரீல்ஸ் எடுத்தது உறுதியானது. மீனாட்சி கொடுத்த புகாரின் பேரில் ஏடிஎஸ்பி சூரியமூர்த்தி, மகளிர் இன்ஸ்பெக்டர் மலையரசி உள்ளிட்டோர் விசாரித்தனர். விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியே வந்தது.

மார் 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை