தீபாவளி பலகார தயாரிப்பில் கோவை பெண் புதுமை | Diwali 2024 | Diwali Special
கைமுறுக்கில் கோலமே போடலாம் தீபாவளி லேகியம் கூட வந்திருக்கு! தீபாவளி என்றதுமே பட்டாசுக்கு அடுத்து நம் நினைவில் வருவது பலகாரங்கள். மழைகாலம் என்பதால் இனிப்புகளை விடவும் கார வகைகள் அதிகம் விரும்பி உண்ணப்படும். அதில் வித விதமாக புதுமைகளை புகுத்தி அசத்துகிறார் கோவையை சேர்ந்த கீதா. கைமுறுக்கு, நெய் முறுக்கு, முள்ளு முறுக்கு, ரிப்பன் முறுக்கு, தேன் குழல் முறுக்கு, அச்சு முறுக்கு, கல்யாண சீர் முறுக்கு, கோல முறுக்கு என இவரது பலகார பட்டியல் நீள்கிறது. வீட்டில் அரைத்த மாவில் தான் எல்லாமே செய்கிறோம். செயற்கை வண்ணம், சுவையூட்டி என எதுவும் கலக்கப்படுவதில்லை. எங்கள் மேல் இருக்கும் நம்பிக்கையில் தான் ஆர்டர்கள் குவிகிறது என சிரித்தபடியே பேச ஆரம்பித்தார் கீதா.