தீபாவளிக்கு வெளியூர் புறப்படும் மக்கள் கவனத்துக்கு!! | Diwali | Diwali 2024 | Extra Buses | Special
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ல் கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்கு மறுநாளும் அரசு விடுமுறை அறிவித்துள்ளது. தீபாவளி தினமான வியாழன், அடுத்ததாக வெள்ளி, சனி, ஞாயிறு என 4 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்கு படையெடுக்க திட்டமிட்டு உள்ளனர். சென்னையில் இருந்து மட்டும் கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் வெளியூர்களுக்கு பயணம் செய்யலாம் என கணிக்கப்பட்டு உள்ளது. தெற்கு ரயில்வே சார்பில் 28 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. தமிழக அரசு சார்பில் 11,200 சிறப்பு பஸ்கள் அறிவித்து உள்ளனர். ரயில் , பஸ்களில் புக்கிங் வேகமாக புல் ஆகி வருகிறது. தீபாவளிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு துவங்கிய சில மணி நேரங்களில் விற்று தீர்ந்தது. அரசு பஸ்களிலும் இதுவரை 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் வரை முன்பதிவு செய்துள்ளனர். 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை சென்னையில் இருந்து தினமும் இயக்கப்படும் பஸ்களுடன் 4,900 சிறப்பு பஸ்கள் என 11,176 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. 28ம் தேதி 700, 29ம் தேதி 2,125, 30ம் தேதி 2,075 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.