/ தினமலர் டிவி
/ பொது
/ திருச்சி சம்பவத்தால் திமுகவில் கொந்தளிப்பு | DMK | Trichy | MKStalin | Kanimozhi
திருச்சி சம்பவத்தால் திமுகவில் கொந்தளிப்பு | DMK | Trichy | MKStalin | Kanimozhi
திருச்சி மரக்கடை பகுதியில் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நேற்று முன்தினம் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது அதிமுக பகுதி செயலர் சுரேஷ் குப்தா அமைச்சர் நேருவையும், கனிமொழியையும் ஆபாசமாக பேசினார். சுரேஷ் குப்தா மீது போலீசில் புகார் செய்யப்பட்டது. காந்தி மார்க்கெட் போலீசார், 4 பிரிவுகளில் வழக்கு பதிந்து கைது செய்தனர். திருச்சி மகளிர் கோர்ட்டில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க வேண்டும் என வக்கீல் கோரிக்கை விடுக்க, அதை ஏற்று நீதிபதி ஜாமின் வழங்கினார். இதற்கு அரசு தரப்பில் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
ஆக 22, 2024