உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ரயில்வே ஜங்ஷனில் திமுகவினர் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம்

ரயில்வே ஜங்ஷனில் திமுகவினர் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம்

மும்மொழிகள் படிக்க வகை செய்யும் தேசிய கல்விக்கொள்கையை ஏற்க திமுக அரசு மறுத்து வருகிறது. தேசிய மொழிகளில் ஏதேனும் ஒன்றை விருப்ப மொழியாக எடுத்து படிக்கலாம் என மத்திய அரசு சொன்னாலும், ஹிந்தியை திணிக்க முயற்சிப்பதாக திமுக எதிர்க்கிறது. மீண்டும் மொழிப்போராட்டம் நடத்துவோம் என்கிறது. தேசிய கல்விக்கொள்கையை ஏற்றால்தான் தமிழகத்துக்கான கல்வி நிதியை ஒதுக்க முடியும் என மத்திய அரசு கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவை மாவட்டம் பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் திமுகவினர் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தினர். ரயில் நிலைய பெயர் பலகையில் இருந்த ஹிந்தி எழுத்துக்கள் மீது மட்டும் கறுப்பு பெயின்ட் பூசி அழித்தனர்.

பிப் 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை