டவுசருடன் கொலை மிரட்டல் விடுத்த திமுக பிரமுகர் வீடியோ வைரல்! | DMK Party Members Clash
கொடுக்கல் வாங்கல் பிரச்னை திமுக நிர்வாகிகள் மோதல்! மேட்டுப்பாளையம் திமுகவில் சலசலப்பு! கோவை மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகைபுதூரை சேர்ந்தவர் முத்துவேல். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட சிறுமுகை நகர செயலாளர் உதயக்குமார் என்பவரிடம் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. சீட் கிடைக்காததால் முத்துவேல், உதயகுமார் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. முத்துவேல் அதே பகுதியை சேர்ந்த திமுக கிளை செயலாளர் ராமமூர்த்தி என்பவருக்கும் பணம் கொடுத்துள்ளார். அதை முத்துவேல் திரும்பி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராமமூர்த்தி டவுசர் மட்டும் அணிந்து கொண்டு, முத்துவேல் வீட்டுக்கு சென்றார். சில இளைஞர்களுடன் உருட்டு கட்டை எடுத்து சென்ற ராமமூர்த்தி, முத்துவேல் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளை அடித்து உடைத்தார். உயிர் பயத்தில் முத்துவேல் குடும்பத்தினர் வீட்டுக்குள் பதுங்கினர். இந்த சம்பவத்தை வீட்டுக்குள் இருந்து வீடியோ எடுத்து வெளியிட்டனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.