பொய் சொல்லி அழைக்கப்பட்ட பள்ளி மாணவர்கள் | Pollachi | DMK
பொள்ளாச்சி சமத்துார் நகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவர்களை, நான் முதல்வன் திட்ட நிகழ்ச்சிக்கு அனுப்புமாறு தி.மு.கவினர் கேட்டுள்ளனர். ஹெட்மாஸ்டர் கோபாலகிருஷ்ணன் நேற்று மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்தார். ஒரு சில மாணவர்கள் நேரடியாகவே விழா நடக்கும் மண்டபத்துக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு நடந்தது அரசின் நான் முதல்வன் திட்ட நிகழ்ச்சி அல்ல என்று தெரிய வந்தது. தி.மு.க இளைஞரணி சார்பில், திசை எங்கும் திராவிடம் என்ற தலைப்பில் நடக்கும் கருத்தரங்கம் மற்றும் புதிய இளைஞர்கள் இணையும் விழா என தெரிந்தது.
ஜூன் 15, 2025