உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கடத்தல் கும்பலின் நெட் ஒர்க் குறித்து கஸ்டம்ஸ் விசாரணை | Chennai Airport | Customs | Thailand | Ganj

கடத்தல் கும்பலின் நெட் ஒர்க் குறித்து கஸ்டம்ஸ் விசாரணை | Chennai Airport | Customs | Thailand | Ganj

தாய்லாந்திருந்து பெருமளவு போதைப் பொருள் கடத்தி வருவதாக, சென்னை ஏர்போர்ட் கஸ்டம்ஸ் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அதிகாரிகள் 2 நாட்களாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். நேற்று இலங்கையில் இருந்து சென்னை வந்த பயணி ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர் தாய்லாந்திலிருந்து இலங்கை வழியாக சென்னை வந்து பெங்களூர் செல்ல இருந்தார். அவரது உடமைகளை சோதனை செய்த போது, உணவுப் பொருட்கள் பாக்கெட்களுக்குள் பதப்படுத்தப்பட்ட ஹைட்ரோபோனிக் கஞ்சா இருந்ததை கண்டுபிடித்தனர். சிக்கிய 2.8 கிலோ கஞ்சாவின் சர்வதேச மதிப்பு 2 கோடியே 80 லட்சம். அவரை கைது செய்து விசாரித்தனர். போதை கடத்தும் கும்பலிடம் 1.2 லட்சம் பணம் பெற்றது தெரிந்தது. கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். அடுத்ததாக தாய்லாந்திலிருந்து சென்னை வந்த சரக்கு விமானத்தில், 2 கிப்ட் பார்சல்களை ஸ்கேன் செய்தபோது அதிலும் ஒரு கிலோ உயர் ரக கஞ்சா சிக்கியது. அதன் மதிப்பு ஒரு கோடி. பார்சல்கள் யாருக்கு வந்தது? என விசாரணை நடக்கிறது.

ஜூன் 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை