/ தினமலர் டிவி
/ பொது
/ சுதர்மா இல்லம் வந்த ஸ்டாலின் மனைவி துர்கா | Durga Stalin | Stalin Wife | Sringeri Sharada Swami
சுதர்மா இல்லம் வந்த ஸ்டாலின் மனைவி துர்கா | Durga Stalin | Stalin Wife | Sringeri Sharada Swami
விஜய யாத்திரைக்காக கடந்த 28ம் தேதி சென்னை வந்த சிருங்கேரி சுவாமிகள், நான்காவது நாளாக மயிலாப்பூரில் உள்ள சுதர்மா இல்லத்தில் நேற்று பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். காலை 8 மணிக்கு சகஸ்ர சண்டி ஹோமம் நடந்தது. அதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமியிடம் ஆசி பெற்றனர். பின் மாலை 4.30 மணிக்கு சுவாமிநாதன் குழுவினர் பஜனை பாடல்களை பாடினர். தொடர்ந்து ஸ்ரீஅபிநவ வித்யாதீர்த்த மகா சுவாமிகளின் ஜெயந்தி விழா நடந்தது. மாலை 5.50 மணியளவில் சுதர்மா இல்லத்திற்கு வந்த முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா, சிருங்கேரி சுவாமிகளிடம் ஆசி பெற்றார்.
நவ 01, 2024