உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தமிழகத்தில் மின்சார பஸ்கள் ஓடுவது எப்போது? | E Bus | TNGovt | Transport

தமிழகத்தில் மின்சார பஸ்கள் ஓடுவது எப்போது? | E Bus | TNGovt | Transport

தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவையில் முதற்கட்டமாக 500 மின்சார பஸ்கள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து 2020ல் அரசாணை வெளியிடப்பட்டது. கே.எப்.டபிள்யு, ஜெர்மன் வங்கி உதவியுடன் மின்சார பஸ்கள் கொள்முதல் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஐந்து ஆண்டுகளாகியும் மின்சார பஸ்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. அதேநேரம் புதுடில்லி, குஜராத், மஹாராஷ்டிரா, கர்நாடகாவில் மின்சார பஸ்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. தமிழகத்தில் 39 மின்சார பஸ்கள் பதிவாகி இயக்கப்படுகின்றன. இவை அனைத்தும் தனியார் பஸ்கள். மின்சார பஸ்கள் இயக்க 1 கி.மீ.க்கு 9 முதல் 11 ரூபாய் வரை செலவாகிறது. டீசலில் 25 ரூபாய் செலவு ஆகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் செலவை குறைக்க, மின்சார பஸ்களை தாமதமின்றி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என போக்குவரத்து துறை வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர். தொழிற்சங்க நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: மின்சார பஸ்கள் வாங்க டெண்டர் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு சாதகமாக இருக்க மூன்று முறை டெண்டர் மாற்றப்பட்டது. இப்போது டெண்டர் இறுதி செய்யப்பட்டு பஸ்களை வாங்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. நிர்வாகம் விரைவாக செயல்பட்டு மின்சார பஸ்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றனர்.

நவ 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை