எலக்ட்ரிக் பைக் ஷோரூமில் பற்றிய தீயில் 30 பைக்குகளும் நாசம் | Electric Vehicle Showroom | Fire | Gi
பெங்களூரு ராஜாஜி நகர் ராஜ்குமார் சாலையில் எலக்ட்ரிக் பைக் ஷோரூம் உள்ளது. செவ்வாயன்று மாலை 5:45 மணியளவில் ஒரு பைக்குக்கு, ஷோரூம் ஊழியர் திலீப் சார்ஜிங் செய்து கொண்டு இருந்தார். அப்போது ஏற்பட்ட மின் கசிவால் எலக்ட்ரிக் பைக்கில் தீப்பிடித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் தீ வேகமாக ஷோரூம் முழுவதும் பரவியது. அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். தகவல் அறிந்ததும் 2 தீயணைப்பு வாகனங்களில், தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஷோரூமுக்குள் பெண் ஊழியர் ஒருவர் சிக்கி கொண்டது தெரிந்தது. தீயணைப்பு படையினர் முதலில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். பின், ஷோரூமுக்குள் சென்று பார்த்தபோது, பெண் ஊழியர் உடல் கருகி இறந்தது தெரிந்தது.