திமுக டவுன் பஞ்சாயத்து தலைவர் வார்டில் நடந்த கூத்து | EB | Electricity Theft | Salem
சேலம் மாவட்டம் கெங்கவல்லி டவுன் பஞ்சாயத்தில் 15 வார்டுகள் உள்ளது. திமுகவை சேர்ந்த 1வது வார்டு கவுன்சிலர் லோகாம்பாள் தலைவராக உள்ளார். இவரது வார்டுக்கு உட்பட்ட நேதாஜி காலனியில் கடந்த 2021ல் துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிப்பறை கட்டப்பட்டது. மின் இணைப்பு பெறாமல் நீண்ட காலமாக பயன்பாட்டுக்கு வராமல் இருந்தது. கடந்த பிப்ரவரியில் அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இதையடுத்து மின் இணைப்பு பெறாமலேயே பிப்ரவரி 11ல் கழிப்பறைகள் பயன்பாட்டுக்கு வந்தது. அருகே இருந்த மின் கம்பத்தில் கொக்கி போட்டு முறைகேடாக கழிப்பறைக்கு மின் இணைப்பு கொடுத்தது கெங்கவல்லி பஞ்சாயத்து நிர்வாகம். பஞ்சாயத்து தலைவரின் வார்டு என்பதால் இது குறித்து மின் ஊழியர்களுக்கு தெரிந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. சமீபத்தில் ஆய்வு நடத்திய அதிகாரிகள் பஞ்சாயத்து நிர்வாகமே மின் திருட்டில் ஈடுபட்டதை கண்டுபிடித்தனர். மின் கம்பத்தில் இருந்து கொக்கி போடப்பட்டு கழிவறைக்கு எடுத்து செல்லப்பட்ட வயர்களை தூண்டித்தனர்.