யானையிடம் சிக்கிய வேட்டை தடுப்பு காவலர் உயிர் தப்பிய அதிசயம்! Elephant Attack | Forest Department |
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே தடிக்கல் கிராம பகுதியில் ஒற்றை காட்டுயானை சுற்றி வருகிறது. இன்று காலை வனத்துறை மற்றும் வேட்டை தடுப்பு காவலர் 15 பேர் அடங்கிய குழுவினர் யானை பட்டாசு வெடித்து அடர்ந்து வனத்துக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென அந்த யானை வனத்துறையினரை விரட்டி உள்ளது. இதில் 29 வயதான வேட்டை தடுப்பு காவலர் நீலகண்டன் யானையிடம் சிக்கினார். யானை முன்னங்காலால் தாக்கியதில் நீலகண்டனுக்கு இடுப்பு மற்றும் காலில் காயம் ஏற்பட்டது. யானை மீண்டும் நீலகண்டனை தாக்க முற்பட்டது. அப்போது அவர் யானையின் பின்னங்கால்களை கெட்டியாக கட்டி பிடித்து கொண்டார். சிறிது நேரம் அப்படியே இருந்த நீலகண்டனை, யானை விட்டு விட்டு சென்றது. அவரை மீட்டு வனத்துறையினர் தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பிடலில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். யானை தாக்கி வேட்டை தடுப்பு காவலர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.