/ தினமலர் டிவி
/ பொது
/ ஆந்திரா காட்டில் யானைகள் தாக்கியதில் 3 பக்தர்கள் மரணம் | Elephant attack | 3 Devotees died
ஆந்திரா காட்டில் யானைகள் தாக்கியதில் 3 பக்தர்கள் மரணம் | Elephant attack | 3 Devotees died
சிவராத்திரியை முன்னிட்டு ஆந்திராவின் அன்னமய்யா மாவட்ட வனப்பகுதிக்குள் அமைந்துள்ள தலகோணா சிவன் கோயிலுக்கு30 பேர் கொண்ட பக்தர்கள் குழுவினர் சென்று கொண்டிருந்தனர். அதிகாலை 5.30 மணியளவில் சேஷாசலம் வனப்பகுதி வழியாக நடந்து சென்றபோது திடீரென காட்டு யானை கும்பல் வழி மறித்தது. யானைகள் தாக்கியதில் தினேஷ், மன்னம்மா, திருப்பதி ஆகிய 3 பக்தர்கள் அதே இடத்தில் இறந்தனர். பலர் காயமடைந்தனர். தகவல் அறிந்த வந்த போலீசார், வனத்துறை அதிகாரிகள், காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
பிப் 25, 2025