சென்னை ஏர்போர்ட்டில் நடந்த போர்க்கால ஒத்திகை | Emergency mock drill | Chennai airport | India stri
சென்னை ஏர்போர்ட்டில் குவிந்த பாதுகாப்பு, மீட்பு படையினர் பயணிகளிடையே திடீர் பரபரப்பு காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் நிலவும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இதற்கிடையே நாடு முழுதும் அனைத்து மாநிலங்களிலும் போர்க்கால ஒத்திகை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி நேற்று நாடு முழுவதும் சுமார் 259 இடங்களில் போர் ஒத்திகை நடந்தது. போர் காலத்தில் மக்களை எப்படி பாதுகாப்பது, போரில் காயமடையும் வீரர்களை எப்படி மீட்பது, அவசர நிலையில் என்னென்ன வழிமுறைகளை செய்ய வேண்டும், கட்டிடங்களில் சிக்கி இருக்கும் மக்களை எப்படி மீட்பது உட்பட பல்வேறு விஷயங்கள் ஒத்திகை பார்க்கப்பட்டது.