/ தினமலர் டிவி
/ பொது
/ போலீஸ் குடித்தது கள்ளா, மோரா? ஏனாம் இன்ஸ்பெக்டர் விளக்கம் Enam police | Police van | drinking
போலீஸ் குடித்தது கள்ளா, மோரா? ஏனாம் இன்ஸ்பெக்டர் விளக்கம் Enam police | Police van | drinking
புதுச்சேரி, ஏனாம் பிராந்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆடல் அரசு தலைமையில் ஒரு எஸ்.ஐ., 2 போலீசார் போக்சோ வழக்கு தொடர்பாக புதுச்சேரி கோர்ட்டுக்கு போலீஸ் வேனில் சென்றனர். கோர்ட்டில் விசாரணை முடிந்ததும் நேற்று மாலை ஏனாம் ஸ்டேஷனுக்கு திரும்பினர். அப்போது அவர்கள் ஏனாமில் தடை செய்யப்பட்ட கள்ளை ஆந்திர மாநிலம் நெல்லூரில் வாட்டர் பாட்டில்களில் வாங்கினர். போலீஸ் வேனில் வைத்து கள் குடித்தனர். கண்ணை நம்பாதே... உன்னை ஏமாற்றும்… நீ காணும் தோற்றம்… என்ற எம்ஜிஆரின் தத்துவ பாடலுக்கு குத்தாட்டமும் போட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. #Puducherry #Enampolice #InspectorAdalArusa #policevan #viralvideo #drinkingalcohol
நவ 14, 2025