உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கல்யாணம் செய்து வைக்க சொல்லி கலெக்டர் ஆபீஸில் ரகளை | Erode | Collector Office | Police

கல்யாணம் செய்து வைக்க சொல்லி கலெக்டர் ஆபீஸில் ரகளை | Erode | Collector Office | Police

ஈரோடு புதுமை காலனியை சேர்ந்தவர் நூர்ஜகான். இவரது மகன் அல்லா பக்ஸ். 40 வயதை கடந்தும் இன்னும் திருமணம் ஆகவில்லை. சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்தது. இன்று திடீரென ஈரோடு கலெக்டர் ஆபீஸ் கிளம்பி சென்றார். தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கேட்டார். மனு கொடுக்க வந்த மக்களுக்கு இடையூறாக வாக்குவாதம் செய்தார். அவரை கலெக்டர் ஆபீஸ் ஊழியர்கள் வெளியேற்ற முயன்றனர். அப்போது அதிகாரிகள் மைக்கை பிடித்து இழுத்து ரகளை செய்தார். இதையடுத்து போலீசார் உதவிக்கு அழைக்கப்பட்டனர். அவர்கள் அல்லா பக்ஸ்சை ஆட்டோவில் ஏற்றி அழைத்து சென்றனர். டவுன் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. ஒவ்வொரு அரசு அலுவலகமாக செல்வது அல்லா பக்ஸ் வாடிக்கையாம். அப்போதும் தனக்கு திருமணம் செய்து வைக்க சொல்லி தகராறு செய்துள்ளார். அவரது மனநல பாதிப்பை அறிந்த போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

டிச 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ