உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஈரோடு இரட்டை சம்பவம்: டாஸ்மாக் கடை மகன் பரபரப்பு புகார் Erode elderly couple dies police investiga

ஈரோடு இரட்டை சம்பவம்: டாஸ்மாக் கடை மகன் பரபரப்பு புகார் Erode elderly couple dies police investiga

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே தோட்டத்து வீட்டில் தனியாக வசித்த ராமசாமி (75), அவரது மனைவி பாக்கியம்மாள் (65) ஆகியோர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தது தமிழகத்தை உலுக்கியுள்ளது. பாககியம்மாள் கழுத்தில் கிடந்த தாலிக்கொடி, தங்க வளையல் உட்பட 15 சவரன் நகைகள் கொள்ளை போயிருந்தன. திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் வயதான தம்பதியர் தொடர்ச்சியாக கொல்லப்படும் நிலையில், பல வழக்குகளில் துப்பு துலங்காமல் போலீசார் திணறி வருகின்றனர். சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் பெற்றோரின் சடலங்களை பெற்றுக் கொள்ள மகன் கவிசங்கர், மகள் பானுமதி மறுத்து விட்டனர். குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என கூறினர். மகன், மகள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து மொடக்குறிச்சி பாஜ எம்எல்ஏ சி.கே.சரஸ்வதி போராட்டத்தில் ஈடுபட்டார்.

மே 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ