உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஐகோர்ட் அதிரடியால் நடந்த திருப்பம் | Ex DGP Jaffer sait | ED case | High court | Withdraws cancella

ஐகோர்ட் அதிரடியால் நடந்த திருப்பம் | Ex DGP Jaffer sait | ED case | High court | Withdraws cancella

இப்படி ஆயிடுச்சே... ஜாபர் சேட் ED வழக்கில் இரண்டே நாளில் டுவிஸ்ட்! டிஸ்க்: ஐகோர்ட் அதிரடியால் நடந்த திருப்பம் | Ex DGP Jaffer sait | ED case | High court | Withdraws cancellation | 2006-2011 திமுக ஆட்சியில், சென்னை திருவான்மியூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வீட்டு மனையை முறைகேடாக பெற்றதாக முன்னாள் டிஜிபி ஜாபர் சேட், அவரது மனைவி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறை 2011-ல் ஊழல் வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கின் அடிப்படையில், சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் ஜாபர் சேட் மீது அமலாக்கத் துறை 2020ல் வழக்கு பதிந்தது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஜாபர் சேட் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “தனக்கு எதிரான ஊழல் வழக்கை 2019ல் ஐகோர்ட் ரத்து செய்து உத்தரவிட்ட நிலையில் அமலாக்கத் துறை வழக்கை தொடர்ந்து நடத்த அனுமதிக்கக் கூடாது. தன் மீதான வழக்கையும் ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வழக்கு ஐகோர்ட் நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், வி.சிவஞானம் அமர்வில் கடந்த 21ம் தேதி விசாரணைக்கு வந்தது. ஜாபர் சேட்டுக்கு எதிரான ஊழல் வழக்கை ஐகோர்ட் ரத்து செய்துள்ளதால் அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை தொடர்ந்து விசாரிக்க முடியாது எனக் கூறி ஜாபர் சேட்டுக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த நிலையில் இந்த வழக்கில் சில சந்தேகங்கள் இருப்பதால் இன்று விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டிருந்தது.

ஆக 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ