உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மகாராஷ்டிரா, ஜார்கண்டில் ஆட்சியை பிடிப்பது யார்?

மகாராஷ்டிரா, ஜார்கண்டில் ஆட்சியை பிடிப்பது யார்?

மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளன. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ளன. வாக்காளர்கள் எப்படி ஓட்டு போட்டனர் என்பதை கணக்கிட்டு பல்வேறு நிறுவனங்கள் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ளன. இந்த கருத்துக்கணிப்புகளின்படி மகாராஷ்டிரா, ஜார்கண்ட் இரண்டு மாநிலங்களிலும் பாஜவுக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் மொத்தம் 288 தொகுதிகள் உள்ளன. ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை. இங்கு பாஜ தலைமையிலான ஆளும் மகாயுதி கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி இடையே போட்டி நிலவுகிறது. பெரும்பாலான கருத்துகணிப்பு முடிவுகள் மகாராஷ்டிராவில் பாஜ கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாகவே கூறி இருக்கின்றன.

நவ 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ