தமிழ் வழியில் படித்ததாக சான்றிதழ்; 9 பேர் மீது வழக்கு | Fake certificate | Group 1 | Madurai Kamaraj
தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், அரசு பணிகளில் 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. 2019 குரூப் 1 தேர்வில் சிலர் தமிழ் வழியில் பயின்றதாக சான்றிதழ் வழங்கி, டி.எஸ்.பி உள்ளிட்ட பணிகளில் சேர்ந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. மதுரையை சேர்ந்த சக்திராவ் ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தார். விசாரித்த கோர்ட், லஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணைக்கு உத்தரவிட்டது. விசாரணையில், குரூப் 1 தேர்வில், தமிழ் வழியில் படித்ததாக 22 பேர் சான்றிதழ் சமர்பித்து உள்ளனர். அவர்களில் 4 பேர் மதுரை காமராஜ் பல்கலையில் தொலைநிலை கல்வியில், தமிழ் வழியில் பட்டப்படிப்பை முடித்ததாக போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தது தெரிய வந்தது. மதுரை வணிக வரித்துறை உதவி கமிஷனர் சொப்னா, ஆத்துார் டிஎஸ்பி சதீஷ்குமார், காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் கலைவாணி. மதுரை காமராஜர் பல்கலை முன்னாள் முதுநிலை கண்காணிப்பாளர் சத்தியமூர்த்தி, அதே பல்கலையின், தொலைநிலை கல்விப்பிரிவு முன்னாள் கண்காணிப்பாளர் புருஷோத்தமன் உட்பட 9 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.