உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஓரகத்தியை பழிவாங்க நினைத்த பெண்ணின் படுபாதக செயல்|Family problem|Aunt attacked child | Telangana

ஓரகத்தியை பழிவாங்க நினைத்த பெண்ணின் படுபாதக செயல்|Family problem|Aunt attacked child | Telangana

தெலங்கானாவின் ஜக்தியால் மாவட்டம் கொருட்லா ஆதர்ஷ் நகரை சேர்ந்த அகுலா மதன் - லட்சுமி தம்பதிக்கு ராம், லக்ஷ்மன் என்ற இரட்டை பிள்ளைகள் உள்ளனர். ராமுக்கு - நவீனா என்பவருடன் திருமணமாகி 7 வயதில் வேதான்ஸ் என்ற மகனும், 5 வயதில் ஹிதிக்ஷா என்ற மகளும் இருக்கின்றனர். இளைய மகன் லட்சுமணுக்கு - மம்தா என்பவருடன் திருமணமாகி அவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மதன் இரண்டு மகன்களுடன் துபாயில் பணிக்கு சென்ற நிலையில், இரண்டு மருமகள் பேரக்குழந்தைகளுடன் மதன் மனைவி லட்சுமி ஒரே வீட்டில் வசித்து வருகிறார். லஷ்மன் மனைவி மம்தா ஆன்லைன் சூதாட்டத்தில் 20 லட்சத்திற்கும் அதிகமாக பணத்தை இழந்ததால் குடும்பத்தில் யாரும் அவரை சரியாக மதிப்பதில்லை என கூறப்படுகிறது. மூத்த மருமகளான நவீனாவிற்கு வீட்டில் அதிக முக்கியத்துவம் கொடுப்பதை கண்டு மம்தா பொறாமைப்பட்டார். ஒரு கட்டத்தில் பொறாமை உச்சமடைந்து நவீனாவை பழிவாங்க முடிவு செய்தார். கடந்த சனிக்கிழமை, மகன் வேதான்ஷ், மகள் ஹிதிக்ஷாவை பள்ளிக்கு அனுப்பிய நவீனா கரீம்நகருக்கு ஷாப்பிங் சென்றார்.

ஜூலை 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி