அடையாற்றில் தத்தளித்த குடும்பத்தால் பரபரப்பு Family rescued from Adayar river| Chennai Rain
மீன் பிடிக்கும் ஆசையில் ஆற்றில் சிக்கிய தம்பதி விழுப்புரத்தை சேர்ந்த ஆதிகேசவன் - செல்வி தம்பதி, சென்னை அடையாறு பகுதியில் வசிக்கின்றனர். கட்டட தொழிலாளர்களான இவர்கள், வேலை இல்லாத சமயத்தில் அடையாறு ஆற்றில் மீன், நண்டு பிடிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இன்று மதியம் ஆதிகேசவன் - செல்வி இருவரும், அடையாறு ஆற்றில் மீன்பிடிக்க சிறிய படகை எடுத்துச் சென்றனர். ஆற்றில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது, திடீரென ஆற்றில் நீரோட்டம் அதிகரித்ததால், இருவரும் அலறினர். நட்டாற்றில் தவித்தனர். தாய், தந்தை ஆற்றில் மீன் பிடிக்க சென்று வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால், அவர்களது மகன் ஒரு படகை எடுத்துக்கொண்டு சென்றார். ஆனால், அவராலும் மீண்டும் கரை திரும்ப முடியவில்லை.