உடல் சிதறியும், இடிபாடுகளில் நசுங்கியும் பறிபோன 13 உயிர்கள் | Fire Cracker Factory | Fire Accident
குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டம் தீசா நகர் தொழிற்பேட்டையில் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் வெடித்து சிதறியதில் ஆலையின் கட்டடங்கள் தரைமட்டமாகின. விரைந்து வந்த தீயணைப்பு குழுவினர் தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த வெடி விபத்தில் உடல் சிதறியும், கட்ட இடிபாடுகளில் சிக்கியும் 13 பேர் இறந்தனர். படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டு உள்ளனர். இன்னும் சில தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்றும், பலி எண்ணிக்கை உயரலாம் என்றும் அஞ்சப்படுகிறது. பட்டாசு ஆலையில் இருந்த பாய்லர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியானது. எனினும், பட்டாசு விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.