பிக் பில்லியன் டேஸ் விளம்பரத்தால் எழுந்த சர்ச்சை | Flipkart Apologises | Promotional Video | Big Bil
பிளிப்கார்ட் நிறுவனம் ஆண்டுதோறும் பிக் பில்லியன் டேஸ் என்ற பெயரில் குறைந்த விலையில் பொருட்களை விற்பது வழக்கம். நேற்று நள்ளிரவு முதல் பிரைம் கஸ்டமர்களுக்கும், இன்று நள்ளிரவு துவங்கி அக்டோபர் 6 வரை மற்றவர்களுமான இந்த ஆண்டு சேல் நடக்கிறது. இது தொடர்பான விளம்பரங்களை பிளிப்கார்ட் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அந்த விளம்பரத்தில் அனிமேஷன் முறையில் இடம்பெற்ற காட்சிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கணவனுக்கு தெரியாமல் ஆன்லைன் மூலம் ஹேண்ட் பேக்குகளை வாங்கி, அதனை வீட்டில் எங்கு எல்லாம் பதுக்கி வைப்பது என ஐடியாக்களுடன் காட்சிகள் இடம் பெற்று இருந்தது. ஆண்கள் சோம்பேறிகள், ஈசியாக ஏமாற்றி விடலாம் என சித்தரிப்பதாக கூறி கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதை ஷேர் செய்து இணையவாசிகள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். ஆண்கள் நலச்சங்கமும் கண்டனத்தை பதிவு செய்தது. தொடர் விமர்சனங்களால் விளம்பர வீடியோவை நீக்கிய பிளிப்கார்ட் இனி இது போல் நடக்காமல் பார்த்து கொள்வோம் என மன்னிப்பும் கேட்டுள்ளது.