உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சிறுமலை வனத்தில் போலீசார் ஆய்வின்போது குண்டு வெடித்தது

சிறுமலை வனத்தில் போலீசார் ஆய்வின்போது குண்டு வெடித்தது

திண்டுக்கல் அருகே சிறுமலை வனப்பகுதி உள்ளது. இங்குள்ள 17 வது கொண்டை ஊசி வளைவில் உள்ள வனத்துறை கண்காணிப்பு கோபுரம் அருகே, 2 நாட்களாக துர்நாற்றம் வீசியுள்ளது. தகவல் அடிப்படையில், போலீசார் மற்றும் வனத்துறையினர் அங்கு சென்று ஆய்வு செய்தனர். வாட்ச் டவரை ஒட்டி உள்ள பட்டா நிலத்தில், அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். சடலம் அழுகிய நிலையில் இருந்தது. சடலத்தின் அருகே ஒயர் இணைப்புடன் பேட்டரி இருந்தது. போலீசார் அதை அகற்ற முயன்றபோது, திடீரென வெடி குண்டு வெடித்து சிதறியது. இதில், போலீஸ் ஏட்டுகள் கார்த்தி, மணி ஆகியோருக்கு கையில் காயம் ஏற்பட்டது. வனக்காவலர் ஆரோக்யராஜுக்கு நெஞ்சு, வயிற்றில் பகுதியில் காயம் ஏற்பட்டது. போலீசாருடன் வெடிகுண்டு நிபுணர்கள், கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்தனர். இறந்து கிடந்தவர் வெடி குண்டு தயாரிக்கும்போது, வெடி விபத்து ஏற்பட்டு, 3 நாட்களுக்கு முன் இறந்து இருக்கலாம் என போலீசார் கூறினர். அவர் தயாரித்த வெடி குண்டு ஒன்று வெடிக்காத நிலையில் இருந்துள்ளது. போலீசார் சடலத்தை அகற்ற முயன்றபோது, அந்த குண்டுதான் வெடித்து இருக்கிறது. சடலம் கிடந்த இடத்தில் இருந்து வெடி மருந்துகள், வயர், பேட்டரி, செல்போன், சார்ஜர் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இறந்தவர் யார் என்ற அடையாளம் தெரியவில்லை. அவர் இங்கு வந்தது ஏன்? எதற்காக வெடிகுண்டு தயாரித்தார்? விபத்து எப்படி நடந்தது என பல கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பிப் 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை