இந்து கோயிலை ஆர்வமுடன் சுற்றிபார்த்த பிரான்ஸ் நாட்டினர்! France | Devotees
பிரான்ஸ் தலைநகர் பாரிஸை சேர்ந்தவர் செபாஸ்டியன். அங்கு தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவர் தொழில் விஷயமாக தனது நண்பர்களுடன் ஒசூர் வந்தார். இந்து கலாசாரத்தில் ஆர்வம் கொண்டவர் செபாஸ்டியன். இதனால் ஒசூரில் உள்ள பழமையான சந்திர சூடேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்ய விரும்பினார். சந்திர சூடேஸ்வரர் கோயிலுக்கு வந்த பிரான்ஸ் நாட்டினருக்கு கோயில் சார்பில் மாலை அணிவித்து மரியாதை அளிக்கப்பட்டது. திருநீறு, சந்தனம், குங்குமம் அணிந்து பயபக்தியுடன் அவர்கள் தரிசனம் செய்தனர்.
மார் 25, 2025