பிரான்சில் இருந்து இலங்கைக்கு சைக்கிள் பயணம் மேற்கொண்ட தமிழர்! France to Srilanka | Cycle Trip |
#FranceToSriLanka #CycleTrip #SriLankanTamil #TravelVlog #AdventureAwaits #CyclingJourney #ExploreSriLanka #Wanderlust #CulturalJourney #GlobalCyclist #TravelDiaries #TamilsInSriLanka #BicycleAdventure #ExploreTheWorld #TravelCommunity #CultureAndTravel #JourneyThroughLands #OutdoorExploration #EnjoyTheRide #CycleAdventure இலங்கையை பூர்வீகமாக கொண்டர் இனோ சூரன். உள்நாட்டு போர் காரணமாக பிரான்ஸில் குடியேறினார். இலங்கையில் போர் முடிந்த நிலையில், தாய்மண்ணை பார்க்க வேண்டுமென ஆவல் ஏற்பட்டது. இதற்காக பிரான்ஸில் இருந்து இலங்கைக்கு சைக்கிளில் செல்ல முடிவெடுத்தார். மூன்று மாதங்களுக்கு முன் கிளம்பிய அவர், பல்வேறு நாடுகள் வழியாக 10 ஆயிரம் கிலோமீட்டர் பயணம் செய்து புதுச்சேரி வந்துள்ளார். அவருக்கு இலங்கை தமிழர்களும், புதுச்சேரி மக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு விமானத்தில் சென்று தாய்மண்ணை பார்க்க ஆவலாக உள்ளதாக இனோ சூரன் கூறினார். பல நாடுகளின் கலாசாரங்கள், பழக்கவழக்கங்களை தெரிந்து கொள்ள இனோ சூரன் சைக்கிள் பயணத்தை தேர்ந்தெடுத்துள்ளார். இலங்கையில் அமைதி திரும்பி உள்ளதால், வெளியே சென்ற இலங்கை மக்கள் மீண்டும் திரும்ப வேண்டுமெனவும் அவர் விருப்பம் தெரிவித்தார்.