உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / UNSC பிரதிநிதித்துவத்தை அதிகப்படுத்த வேண்டும் french support for india| UNSC|

UNSC பிரதிநிதித்துவத்தை அதிகப்படுத்த வேண்டும் french support for india| UNSC|

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் பிரான்ஸ் அதிபர் ஆதரவு ஐக்கிய நாடுகள் பொது சபையில் உரையாற்றிய பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்திர உறுப்பினர் அந்தஸ்து வழங்குவதற்கு ஆதரவு தெரிவித்தார். ஐநாவில் சீர்திருத்தங்கள் கொண்டு வர வலியுறுத்திய அவர், மற்ற உறுப்பினர்களை தடுக்கும் பரஸ்பர மனப்போக்கான பாதுகாப்பு கவுன்சில் இருக்கும் வரை, நம் ஒவ்வொருவரின் விருப்பதற்கு ஏற்ப முன்னேறுவது கடினம். அப்படியொரு சிறந்த அமைப்பு முறை இங்கு இருப்பதாக தெரியவில்லை. ஐநா திறம்பட செயல்படுவதற்கு பிரதிநிதித்துவத்தை அதிகப்படுத்த வேண்டியது மிக முக்கியமானது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும். ஜெர்மனி, ஜப்பான், இந்தியா, பிரேசில் நாடுகளை நிரந்த உறுப்பினர்கள் ஆக்க வேண்டும் என பிரான்ஸ் அதிபர் மேக்ரான் வலியுறுத்தினார். ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் 15 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. அதில், சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய 5 நாடுகள் நிரந்த உறுப்பினர்கள். இந்த நாடுகளுக்கு வீட்டோ எனப்படும் தீர்மானத்தை ரத்து செய்யும் அதிகாரம் உள்ளன. எஞ்சிய 10 தற்காலிக உறுப்பினர்கள், 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்வு செய்யப்படுகின்றனர். வளரும் நாடுகளின் விருப்பங்களை பிரதிநிதித்துவப்படுத்த நிரந்தர உறுப்பினர் ஆக வேண்டும் என நீண்ட காலமாக இந்தியா கேட்டு வருகிறது.

செப் 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி