/ தினமலர் டிவி
/ பொது
/ டாப் கியர் போட்ட தங்கம் விலை: இனி நிற்காது | Gold Rate | Gold rate Today | Gold Price
டாப் கியர் போட்ட தங்கம் விலை: இனி நிற்காது | Gold Rate | Gold rate Today | Gold Price
முதல்முறையாக ஒரு சவரன் தங்கம் விலை ரூபாய் 60 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம் தொட்டுள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்தது. ஒரு சவரன் 60 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் 7,525 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அமெரிக்காவின் அதிபாராக பதவியேற்றுள்ள டிரம்ப் வரி விதிப்பு, குடியுரிமை விதிகளில் மாற்றம் என அடுக்கடுக்கான உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார். இதனால் உண்டான பதற்றத்தில் உலகம் முழுக்க பங்கு சந்தைகள் சரிவை கண்டு வருவது தங்கம் விலை அதிகரிக்க காரணமாகும்.
ஜன 22, 2025