தங்க தகடுகளை பராமரிப்பதாக திருடியவர் வீட்டில் SIT ரெய்டு Sabarimala| Iyyappan Temple| Gold theft in
சபரிமலை ஐயப்பன் கோயிலில், பராமரிப்பு பணிகளுக்காக துவாராபாலகர்கள் சிலைகளில் இருந்து தங்க தகடுகள் கழற்றப்பட்டது. பராமரிப்பு பணிகள் முடிந்து மீண்டும் பொருத்தியபோது, 4 கிலோ அளவுக்கு தங்கம் மாயமானதாக புகார் எழுந்தது. இது பற்றி விசாரிக்க, சிறப்பு புலனாய்வு குழுவை கேரளா ஐகோர்ட் அமைத்தது. துவாரபாலகர்கள் சிலைகளின் தங்க தகடுகளை பராமரிக்கும் செலவை ஏற்று இருந்த, பெங்களூரை சேர்ந்த உன்னிகிருஷ்ணன் போத்தி, திருவிதாங்கூர் தேவசம்போர்டு முன்னாள் நிர்வாக அதிகாரி முராரி பாபு ஆகியோரை சிறப்பு புலனாய்வு குழு கைது செய்தது. விசாரணையில், தங்கத்தை திருடியதை உன்னிகிருஷ்ணன் போர்த்தி ஒப்புக்கொண்டார். திருடிய தங்கத்தின் ஒரு பகுதியை கர்நாடகாவின் பல்லாரியை சேர்ந்த நகை வியாபாரி கோவர்தனுக்கு விற்றதாக கூறினார். பல்லாரிக்கு சென்ற, புலனாய்வு குழு, கோவர்தனின் நகை கடையில் நடத்திய சோதனையில் 476 கிராம் தங்கத்தை மீட்டனர். தங்க வியாபாரி கோவர்தன் கூறும்போது, நான் எந்த தவறும் செய்யவில்லை. சபரிமலை கோயிலுக்கு கதவு உட்பட பல நன்கொடைகள் அளித்துள்ளேன். யார் தவறு செய்திருந்தாலும் தண்டனை அனுபவிப்பார்கள். எனக்கு தெரிந்த உண்மைகளை சிறப்பு புலனாய்வு குழுவிடம் தெரிவித்துள்ளேன் என்றார். அதே போல், பெங்களூரு ஸ்ரீராமபுரத்தில் உள்ள உன்னிகிருஷ்ணன் வீட்டிலும் சோதனை நடத்தினர். அங்கிருந்து நகைகள், தங்க கட்டிகள், தங்க நாணயங்கள் ஆகியவை கைப்பற்றினர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், சபரி மலை கோயில் தங்க தகடுகளில் இருந்து திருடப்பட்டதா என்பதை அறிய, ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என அதிகாரிகள் கூறினர். தங்க தகடுகள் சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள ஸ்மார்ட் கிரியேஷன்ஸ் நிறுவனத்தில் செப்பனிடப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கும் புலனாய்வு குழுவினர் சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டனர். #Sabarimala #IyyappanTemple #SabarimalaGoldTheft #SIT #GoldRecovery #IyyappanTempleGold