உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஓட்டை உடைசல் பஸ்களால் தொடரும் அசம்பாவிதம் | govt bus accident | steering problem | driver, girl chi

ஓட்டை உடைசல் பஸ்களால் தொடரும் அசம்பாவிதம் | govt bus accident | steering problem | driver, girl chi

தருமபுரி அடுத்த நூலஹள்ளியில் இருந்து 2B அரசு தருமபுரி நோக்கி வந்துகொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் தேவராஜ் ஓட்டினார். உழவன்கொட்டாய் அருகே வந்தபோது திடீரென ஸ்டியரிங் செயலிழந்துள்ளது. இதனால் பஸ்சை திருப்ப முடியாமல் சாலையோரம் இருந்த ராமு என்பவர் வீட்டின் மீது மோதி நின்றது. இதில் அரசு பஸ்சின் முன்பக்கம் முழுவதும் நொறுங்கியது. ராமு வீட்டின் கிச்சன் பகுதி இடிந்து விழுந்தது. பஸ் வீட்டின் மீது மோதிய சமயம் அந்த இடத்தில் விளையாடிக் கொண்டிருந்த, நரசிம்மமன் - சோனியா தம்பதியின் 4 வயது மகள் ஹர்த்திகா, டிரைவர் தேவராஜ் இருவரும் படுகாயம் அடைந்தனர். மற்ற பயணிகள் பஸ்சின் பின்புறம் இருந்ததால் காயமின்றி அதிர்ஷ்ட்டவசமாக உயிர் தப்பினர்.

ஜூலை 23, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Padmasridharan
ஜூலை 23, 2025 17:29

இந்த மாதிரி பழைய பேருந்துகளில்தான் இலவச பெண்களின் பயணமும் குறைந்தபட்ச டிக்கெட்டும் விற்கப்படுகிறது. உட்கார முடியாது, நிற்க முடியாது, மழை தண்ணீர் உள்ளே கொட்டும், கை, கால்கள், துணிகள் எதிலேயாவது போயி மாட்டிக்கொண்டு கிழிந்து ரத்தம் வரும்..


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ