நவம்பர் ஜிஎஸ்டி வசூல் 8.5 சதவீதம் உயர்ந்தது | GST revenue | November
கடந்த நவம்பர் மாதத்தில் ரூ.1.82 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் ஆகியுள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ. 34,141 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ. 43 ,047 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ. 91,828 கோடி, செஸ் வரி ரூ.13,253 கோடி ஆகும். 2023 ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்தாண்டு நவம்பரில் ஜிஎஸ்டி வசூல் 8.5 சதவீதம் அதிகம்.
டிச 01, 2024