யூடியூபர் ஹர்சா சாய் சிக்கியது எப்படி? அதிர்ச்சி தகவல் | Harsha Sai Actress case | Mr beast
பார்டி முதல் பலாத்காரம் வரை ஹர்சா சாய் இப்படி பட்டவரா? திடுக்கிட வைத்த நடிகை இந்தியாவில் உள்ள யூடியூபர்களில் மிகவும் பிரபலமான ஹர்ஷா சாய் மீது பிக்பாஸ் பிரபலமும் மும்பையை சேர்ந்த நடிகையுமானவர் பாலியல் புகார் கூறியது அதிர வைத்துள்ளார். நடிகை புகாரை ஏற்று ஹர்சா சாய் மீது தெலங்கானா போலீசார் பாலியல் பலாத்கார வழக்கும் பதிவு செய்துள்ளனர். அதிர்ச்சி வழக்கின் பின்னணி என்ன என்பதை பார்க்கலாம். கஷ்டப்படும் ஏழைகள், விவசாயிகள், கூலித்தொழிலாளிகள், சிறு வியாபாரிகளுக்கு கட்டுக்கட்டாக பணம் கொடுப்பது; அவர்கள் கற்பனை கூட செய்ய முடியாத விலை உயர்ந்த பொருட்களை வாங்கி கொடுப்பது என்று வியக்க வைக்கும் உதவிகளை செய்து அதை வீடியோவாக யூடியூப்பில் பதிவு செய்து பிரபலம் ஆனவர் ஹர்சா சாய். ஆந்திராவின் விஜயநகரம் தான் அவர் பிறந்த ஊர். தெலுங்கு, இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் யூடியூப் சேனல் வைத்துள்ளார். கோடி கணக்கானவர்கள் அவரது வீடியோவை பார்க்கின்றனர். பல லட்சம் பேர் அவருக்கு ரசிகர்களாக உள்ளனர். ஒவ்வொரு முறை அவரது வீடியோவை பார்க்கும் போதும், ஹர்சா சாய் எவ்ளோ நல்ல மனுஷனா இருக்காரு என்று மனதுக்குள்ளே பாராட்டு பத்திரம் படிப்பார்கள். அந்த அளவுக்கு வீடியோக்களில் நல்லவராக தெரிவார் ஹர்சா சாய். 26 வயதில் அவர் எட்டிப்பிடித்த உயரம் மிகவும் பெரியது. அப்படிப்பட்டவர் மீது தான் மும்பையை சேர்ந்த 25 வயதான நடிகை பாலியல் புகார் கூறினார். தெலங்கானா மாநிலம் நார்சிங்கி போலீசில் நடிகை புகார் செய்தார். அவர் கூறி இருப்பது: நண்பர்களுடன் ஒரு பார்டியில் கலந்து கொண்ட போது தான் ஹர்சா சாயின் அறிமுகம் கிடைத்தது. 2 பேரும் நண்பர்கள் ஆனோம். பின்னர் நெருங்கி பழகி வந்தோம். சினிமா சார்ந்த நிறைய ப்ராஜெக்ட்களில் இணைந்து வேலை செய்தோம். அவர் என்னை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை காட்டினார். நானும் சம்மதம் தெரிவித்தேன். இருவரும் பல முறை தனிமையில் சந்தித்து இருக்கிறோம். திருமண ஆசையை காட்டியே அவர் என்னை பலாத்காரம் செய்தார். 2 பேரும் தனியாக இருக்கும் போது என்னை கட்டாயப்படுத்தி பல முறை நிர்வாணமாக போட்டோ, வீடியோ எடுத்தார். இப்போது அந்த வீடியோக்களை வெளியே விட்டு விடுவேன் என்று மிரட்டுகிறார். இதுவரை அவர் என்னிடம் 2 கோடி ரூபாய் வாங்கி உள்ளார். அந்த பணத்தை தரமாட்டேன் என்று மிரட்டுகிறார். என் வாழ்க்கையை அவர் சீரழித்து விட்டார் என்று நடிகை தனது புகாரில் சொல்லி இருந்தார். புகாரின் பேரில் ஹர்சா சாய் மீது நார்சிங்கி போலீசார் பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்தனர். பண மோசடி, நிர்வாண போட்டு எடுத்து மிரட்டுவது தொடர்பாகவும் அவர் மீது வழக்கு பாய்ந்துள்ளது. யூடியூபில் இருந்து சற்றே சினிமா பக்கம் திரும்பிய ஹர்சா சாய் படம் எடுக்கும் வேலையில் தீவிரமாக களம் இறங்கினார். ஒரு படத்துக்கான கதையை உருவாக்கி அவரே இயக்கினார். அந்த படத்தை தயாரிக்க தான் நடிகையிடம் பணம் வாங்கியதாக சொல்லப்படுகிறது.