நஸ்ரல்லா இறுதிச்சடங்கில் பறந்த இஸ்ரேல் போர் விமானம் hassan nasrallah funeral | israel vs hezbollah
இஸ்ரேல் நடத்திய பேஜர் அட்டாக், வாக்கி டாக்கி அட்டாக் மூலம் இஸ்ரேல்-ஹெஸ்புலா போர் வெடித்தது. தெற்கு லெபனான் மற்றும் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் புகுந்து ஹெஸ்புலா முகாம்களை இஸ்ரேல் ராணுவம் வேட்டையாடியது. போரின் உச்சமாக செப்டம்பர் இறுதியில் ஹெஸ்புலா உச்ச தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை குண்டு வீசி கொன்றது இஸ்ரேல். தெற்கு பெய்ரூட்டில் இருந்த ஒரு பில்டிங் அடியில் ரகசியமாக தளபதிகளுடன் மீட்டிங் போட்டார். உளவுத்துறை மூலம் இதை மோப்பம் பிடித்த இஸ்ரேல் ராணுவம் அந்த பில்டிங்கில் துல்லியமாக குண்டு வீசி நஸ்ரல்லாவையும் முக்கிய தளபதிகளையும் கொலை செய்தது. மூன்று தலைமுறைகளாக தங்களை வழிநடத்திய உச்ச தலைவர் நஸ்ரல்லாவை இழந்ததால் ஹெஸ்புலா நிலைகுலைந்து போனது. படிப்படியாக வலிமையை இழந்த ஹெஸ்புலா போர் நிறுத்தத்துக்கும் உடன்பட்டது. நவம்பர் இறுதியில் போர் நிறுத்தம் வந்தது. நஸ்ரல்லா இறந்த உடன் அவரது சடலத்தை தற்காலிகமாக அடக்கம் செய்திருந்த ஹெஸ்புலா, ஈரான் உதவியுடன் இன்று முறைப்படி இறுதிச்சடங்கை பிரமாண்டமான முறையில் நடத்தியது. இதற்காக 5 மாதம் முன்பு அடக்கம் செய்த நஸ்ரல்லா உடலை சவப்பெட்டியுடன் தோண்டி எடுத்தனர். பெய்ரூட்டின் புறநகர் பகுதியில் உள்ள காமில் சாவுன் ஸ்போர்ட் சிட்டி மைாதனத்துக்கு கொண்டு வந்தனர். சவப்பெட்டி மீது ஹெஸ்புலாவின் மஞ்சள் நிற கொடி நிறத்தில் துணி போர்த்தி இருந்தனர்.