/ தினமலர் டிவி
/ பொது
/ உபி துயர ஸ்பாட்டில் இருந்து நேரடி ரிப்போர்ட் | Hathras Stampede | Bhole Baba | UP Hathras incident
உபி துயர ஸ்பாட்டில் இருந்து நேரடி ரிப்போர்ட் | Hathras Stampede | Bhole Baba | UP Hathras incident
உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் மாவட்டம் புல்ராய் கிராமத்தில் நடந்த சோக சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. போலே பாபா என்ற மத போதகர் நடத்திய சொற்பொழிவு நிகழ்ச்சியின் போது நெரிசலில் சிக்கி கொத்து கொத்தாக மக்கள் மரணம் அடைந்தனர். இதுவரை மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 121 ஆக உள்ளது. தொடர்ந்து பலி அதிகரித்த வண்ணம் இருக்கிறது. போலே பாபா சொற்பொழிவு பரந்து விரிந்த வயல்வெளி பகுதியில் நடந்தது. அவர் சொற்பொழிவு கேட்க 2 லட்சத்துக்கும் அதிகமானோர் திரண்டுள்ளனர். நிகழ்ச்சி முடிந்து போகும் போது, போலே பாபா ஆசி பெற பக்தர்கள் முண்டி அடித்தனர். அவர் கார் சென்ற தடத்தில் மண் எடுக்க முயன்ற போது தான் இவ்வளவு மரணம் நடந்தது தெரியவந்தது.
ஜூலை 03, 2024