உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இடுக்கியில் கொட்டிய கனமழை: நிலச்சரிவில் சிக்கிய லாரி | Heavy rain | Landslide | Munnar | Road close

இடுக்கியில் கொட்டிய கனமழை: நிலச்சரிவில் சிக்கிய லாரி | Heavy rain | Landslide | Munnar | Road close

தமிழகம் - கேரளா எல்லையை இணைக்கும் இடுக்கியில் கடந்த ஒரு வாரமாக தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்க்கிறது. தொடர் கனமழையால் நேற்று இரவு மூணாறு பழைய அரசு கலைக்கல்லூரி அருகே பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக சென்ற சரக்கு லாரி ஒன்று நிலச்சரிவில் சிக்கிக்கொண்டது. லாரிக்குள் இருந்த டிரைவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் வழியிலேயே இறந்தார். அவர், மூணாறு அந்தோனியார் நகரை சேர்ந்த 58 வயது கணேசன் என்பது தெரிந்தது.

ஜூலை 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ