/ தினமலர் டிவி
/ பொது
/ திடீரென 50 அடிக்கு உள் வாங்கிய கடல்! | Heavy Rain | Rain Alert | Bay of Bengal | Tiruchendur
திடீரென 50 அடிக்கு உள் வாங்கிய கடல்! | Heavy Rain | Rain Alert | Bay of Bengal | Tiruchendur
வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகம் முழுதும் பரவலாக மழை பெய்து வருகிறது. தூத்துக்குடியில் காலை முதல் மிதமான மழை பெய்து வந்த நிலையில் மாலை கன மழை கொட்டி வருகிறது. அதே போல் வழக்கத்துக்கு மாறாக திருச்செந்தூர் கடலும் 50 அடி தூரத்திற்கு உள் வாங்கி காணப்படுகிறது. நாழிக்கிணருக்கு எதிர் புறம் கடல் உள்வாங்கி பாசி படர்ந்த பவளப்பாறைகள் வெளியே தென்படுகிறது. அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் திருச்செந்தூர் கடல் உள்வாங்குவது வழக்கம்.
அக் 14, 2024