/ தினமலர் டிவி
/ பொது
/ கனமழையால் டில்லி மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு | Heavy Rain in Delhi | | Red Alert
கனமழையால் டில்லி மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு | Heavy Rain in Delhi | | Red Alert
டில்லிக்கு ரெட் அலர்ட் மழையில் பறிபோன 7 உயிர் கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 250க்கும் மேற்பட்டோர் பலியான சோகத்தின் சுவடு மறைவதற்குள் டில்லியிலும் கனமழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டில்லியில் நேற்று மாலை இடியுடன் கூடிய கன மழை பெய்தது. மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை மழை விடாதுகொட்டியதால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. 12 சென்டி மீட்டர் வரை மழை பதிவானது. கனமழை காரணமாக வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த சம்பவங்களில் 7 பேர் இறந்தனர். டில்லியில் நீர் தேங்கிய கால்வாயில் மூழ்கி 22 வயதான தாய் தனுஜா, 3 வயது மகன் பிரியன்ஷ் இறந்தனர்.
ஆக 01, 2024