உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சென்னை இதுவரை பார்த்திராத போக்குவரத்து நெரிசல் | Heavy traffic | Chennai air show | People struggle

சென்னை இதுவரை பார்த்திராத போக்குவரத்து நெரிசல் | Heavy traffic | Chennai air show | People struggle

மிரட்டிய விமான சாகசம் மிரள வைத்த டிராபிக் ஜாம்! விழிபிதுங்கிய சென்னை மக்கள் சென்னை வேளச்சேரி பறக்கும் ரயில் நிலையத்தில் ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறியதால் ஸ்தம்பித்த ரயில் நிலையம் சென்னை மெரினா பீச்சில் இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு தினத்தை முன்னிட்டு விமானப்படை வீரர்களின் சாகச நிகழ்ச்சி இன்று நடந்தது. காலை 11 மணிக்கு தொடங்கி பகல் ஒரு மணி வரை நடந்த விமானங்களின் கண்கவர் சாகசங்களை லட்சக்கணக்கான மக்கள் பார்த்து ரசித்தனர். இதற்காக காலை 7 மணி முதலே நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் குவிந்தனர். பார்க்கிங் வசதி தனியாக பல்வேறு சாலைகளில் செய்யப்பட்டு இருந்தது. காலையில் முறையான திட்டமிடலால் மக்கள் கூட்டம் கட்டுக்குள் இருந்தது. மக்களும் வெவ்வேறு நேரங்களில் கடற்கரைக்கு வந்ததால், போலீசார் கட்டுப்படுத்துவதும் எளிதாக இருந்தது. நிகழ்ச்சி முடிந்ததும் எல்லா மக்களும் ஒரே நேரத்தில் புறப்பட தொடங்கினர். கடற்கரையில் இருந்து காமராஜர் சாலைக்கு வர வெவ்வேறு வழிகள் இருந்ததால், அனைத்து வழிகளிலும் மக்கள் கூட்டம் சாரை சாரையாகப் படையடுத்தது. இதனால் ஏற்கெனவே வந்த கூட்டத்துடன் புதிதாக வந்தவர்களின் எண்ணிக்கையும் சேர்ந்தது. நிகழ்ச்சி முடிந்த பின் போலீஸார் யாரும் போக்குவரத்தை ஒருங்கிணைக்காததால், நேரம் செல்லச் செல்ல கூட்டம் தள்ளுமுள்ளாக மாறியது.

அக் 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !