இஸ்ரேலை எதிர்க்க ஈரானுக்கு ஆதரவாக நிற்கும் ஹிஸ்புல்லா hezbollah rockets | israel hamas iran war | ga
இஸ்ரேல், ஹமாஸ் இயக்கத்தினர் இடையே 10 மாதமாக நடந்து வருகிறது. சமீபத்தில், ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவரான இஸ்மாயில் ஹனியே, ஈரான் தலைநர் டெஹ்ரானில் தங்கியிருந்தபோது படுகொலை செய்யப்பட்டார். இதற்கு இஸ்ரேல்தான் கரணம் எனக்கூறிய ஈரான், பழிவாங்க இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவோம் என்றது. இஸ்ரேல்-ஈரான் இடையே எப்போது வேண்டுமானாலும் போர் மூளூம் என்ற சூழ்நிலை ஏற்பட்டது. இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, ராணுவத்தை அனுப்ப அமெரிக்க முடிவு செய்தது. இஸ்ரேல் அருகே விமானம் தாங்கி போர்க்கப்பல் நிறுத்தப்படும் என்றும் பென்டகன் தெரிவித்தது. இந்நிலையில், லெபனானில் இயங்கி வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினர், இஸ்ரேல் மீது ராக்கெட்டு தாக்குதலை தொடங்கியுள்ளனர்.