/ தினமலர் டிவி
/ பொது
/ கபாலீஸ்வரர் கல்லூரியில் இந்துக்கள் நியமனத்தை எதிர்த்த வழக்கு தள்ளுபடி | Mylapore temple
கபாலீஸ்வரர் கல்லூரியில் இந்துக்கள் நியமனத்தை எதிர்த்த வழக்கு தள்ளுபடி | Mylapore temple
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிதியில் கொளத்தூரில் அருள்மிகு கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரி துவங்க இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்தது. இந்த கல்லுாரியில் உதவியாளர், இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட், அலுவலக உதவியாளர், வாட்ச்மேன், துப்புரவாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று, 2021 அக்டோபரில், அறநிலையத்துறை இணை ஆணையர் அறிவிப்பு வெளியிட்டார். அதில் இந்து மதத்தை சார்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்தும், இந்த அறிவிப்பானையை ரத்து செய்ய வலியுறுத்தியும் சுகைல் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
நவ 26, 2024