ஈரான் தளபதியை விரட்டி கதை முடித்த ட்ரோன்-பகீர் காட்சி israel vs iran | idf video Behnam Shahriyari
ஒரு வாரம் மேலாக நடக்கும் ஈரான், இஸ்ரேல் போரில் இரு நாடுகளும் மாறி மாறி குண்டு வீசி வருகின்றன. போர் விமானங்களில் சென்று ஈரான் மீது குண்டு வீசுகிறது இஸ்ரேல். பதிலுக்கு சக்தி வாய்ந்த ஏவுகணைகளை வைத்து இஸ்ரேலை அடிக்கிறது ஈரான். ஈரானின் அணு ஆய்வு கூடங்கள், ராணுவ தளங்களை குறி வைப்பதை தாண்டி, டார்கெட் கில்லிங் எனப்படும் முக்கிய நபர்களை குறி வைத்து கொல்லும் ஆபரேஷனிலும் இஸ்ரேல் ஈடுபட்டுள்ளது. போரை துவங்கிய முதல் நாளில் மட்டும் 9 அணு விஞ்ஞானிகளையும், ஈரான் ராணுவத்தின் பிரதான தளபதி உட்பட 7 தளபதிகளையும் இஸ்ரேல் டார்கெட் கில்லிங் முறையில் கொலை செய்தது. அதாவது, தாங்கள் குறி வைக்கும் நபர் எங்கு இருக்கிறார் என்பதை உளவுத்துறை மூலம் மோப்பம் பிடித்து துல்லியமாக குண்டு வீசி அவர்களை கொன்றது. நேற்று மாலை முதல் இன்று காலை வரை டார்கெட் கில்லிங் ஆபரேஷனை மீண்டும் இஸ்ரேல் நடத்தியது. இந்த முறை ஈரானின் முக்கிய ராணுவ தளபதிகளும், சில அணு விஞ்ஞானிகளும் குறி வைக்கப்பட்டனர். இஸ்ரேல் மீது ஹமாசை தாக்க வைத்து இஸ்ரேல்-காசா போருக்கு வித்திட்ட ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர ராணுவ படை தளபதி சயீத் இஸாடியை Saeed Izadi இஸ்ரேல் ராணுவம் கொன்றது. 2023 அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலில் 1200 பேரை கொல்ல ஹமாஸ் பயன்படுத்திய ஆயுதங்களை எல்லாம் இவர் தான் வழங்கினார் என்று இஸ்ரேல் ராணுவம் சொன்னது. அதே போல் இஸ்லாமிய புரட்சிகர ராணுவ படையின் இன்னொரு மூத்த தளபதி Behnam Shahriyari-யையும் டார்கெட் கில்லிங் முறையில் இஸ்ரேல் ட்ரோன் குண்டு வீசி கொன்றது. இஸ்ரேலில் இருந்து 1000 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மேற்கு ஈரான் பகுதியில் தனது வாகனத்தில் Behnam சென்று கொண்டிருந்தார். ஈரானுக்குள் புகுந்த இஸ்ரேலின் ட்ரோன், ரோட்டில் சென்ற காரை பின்தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் துல்லியமாக குண்டு வீசி தாக்கியது. இதில் Behnam வாகனம் வெடித்து சிதறியது. உள்ளே இருந்த அவர் உடல் சிதறி பலியானதாக இஸ்ரேல் ராணுவம் சொன்னது. இது தொடர்பான வீடியோவையும் இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டு அதிர வைத்துள்ளது. இஸ்ரேலை கவுன்ட்டர் செய்ய காசாவில் ஹமாஸ், லெபனானில் ஹெஸ்புலா, ஏமனில் ஹவுதி பயங்கரவாதிகளை பின்னால் இருந்து ஈரான் வளர்த்தது. இஸ்ரேலை தாக்க 3 ஆயுத குழுக்களுக்கும் எல்லா விதமான ஆயுதங்களையும் ஈரான் வழங்கியது. இந்த ஆயுதங்களை பத்திரமாக கொண்டு சேர்க்கும் முக்கிய பணியை Behnam கவனித்தார். ஹமாஸ், ஹெஸ்புலா, ஹவுதிகளுக்கு தேவையான நிதியை திரட்டி கொடுக்கும் வேலையையும் இவர் பார்த்து வந்தார். குறிப்பாக துருக்கி, லெபனானில் உள்ள தொழில் அதிபர்களிடம் இருந்து நிதி திரட்டி வழங்கி வந்தார். Behnam-ஐ கொல்ல வேண்டும் என்று முதன் முதலாக 2009ல் திட்டம் தீட்டப்பட்டது. இப்போது ஈரானில் வைத்து குண்டு வீசி கொன்று விட்டோம் என்று இஸ்ரேல் ராணுவம் கூறியது. அதே போல் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர ராணுவ படையின் ட்ரோன் பிரிவு முக்கிய தளபதியாக இருந்த முகமது பாகேரை 13ம் தேதி குண்டு வீசி கொன்றோம். அதே படையின் 2வது ரேங்கில் இருந்த அமின்பவுர் ஜோடகியை இப்போது குண்டு வீசி கொலை செய்து இருக்கிறோம் என்று இஸ்ரேல் ராணுவம் கூறி உள்ளது.