/ தினமலர் டிவி
/ பொது
/ சட்ட விரோத குடியேற்றம் வீடு, வீடாக தேடும் போலீஸ் Illegal Bangladeshi Migrants arrested in Delhi| P
சட்ட விரோத குடியேற்றம் வீடு, வீடாக தேடும் போலீஸ் Illegal Bangladeshi Migrants arrested in Delhi| P
இந்த ஆண்டு மத்தியில் வங்க தேசத்தில் ஏற்பட்ட கிளர்ச்சியை தொடர்ந்து, பிரதமர் ஷேக் ஹசீனா வெளியேறி இந்தியா வந்தார். வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. வங்கதேசத்தில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளதால், அங்கிருந்து பலர் சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் குடியேறுகின்றனர். டில்லியின் பல இடங்களில் வங்க தேசத்தினர் சட்ட விரோதமாக தங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, போலீசார் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். சில தினங்களுக்கு முன்பு, ரங்கபுரியில் சம்சுல் ஷேக் என்ற வங்கதேச பிரஜை குடும்பத்துடன் சட்டவிரோதமாக தங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
டிச 29, 2024