சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் | India - Pakistan tensions | Bomb threat | Che
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. பாகிஸ்தான் மற்றும் ஆக்ரமிப்பு காஷ்மீரில் இருந்த பயங்கரவாதிகளின் 9 முகாம்கள் தகர்க்கப்பட்டன. அதை தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லை மாநிலங்களை குறிவைத்து ஏவுகணை, ட்ரோன்களை வீசுகிறது. அனைத்தையும் நமது ராணுவம் வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் தகர்த்து உரிய பதிலடி கொடுத்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், நேற்று ஹிமாச்சல் பிரதேசம், தர்மசாலாவில் நடந்த பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதிய போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மார்ச் 22ல் தொடங்கிய 18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி வரும் 25ம் தேதி நடக்க இருந்தது. 58 போட்டிகள் முடிந்த நிலையில் மீதமுள்ள போட்டிகள் பாதுகாப்பு கருதி ஒரு வாரத்துக்கு தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.